சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னெரிச்சரிக்கை நடவடிக்கை

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. விவசாய விளைநிலங்களில் உள்ள கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் பருவ மழை தொடங்கவிருக்கும் நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் விரைந்து செய்து வருகின்றன.

முதலமைச்சர் ஆய்வு

இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஏரியில் நீர் இருப்பு, மதகுகள் சீரமைப்பு, ஆகாயத் தாமரை அகற்றுதல், கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். 3,645 மில்லியன் கனஅடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 2,789 கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளதாக முதலமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here