நடிகை மியா ஜார்ஜின் தந்தை மரணமடைந்த செய்தி கேட்டு திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
பிரபல நடிகை
பிரபல மலையாள நடிகையான மியா ஜார்ஜ், அமரகாவியம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைதொடர்ந்து இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, எமன், வெற்றிவேல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘கோப்ரா’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட மியா ஜார்ஜ்க்கு, கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
தந்தை மரணம்
இந்த நிலையில், நடிகை மியா ஜார்ஜின் தந்தை ஜார்ஜ் ஜோசப் நேற்று மரணமடைந்தார். தந்தையின் மரணம் மியா ஜார்ஜூக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தையை இழந்து வாடும் அவருக்கு, திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் ஆறுதல் கூறி வருகின்றனர்.