ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசுகையில்; “எல்லாத்தையும் விட்டுவிட்டு மக்களுக்காக வந்துள்ள இந்த விஜயை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள். பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்டோம்; அண்ணா, எம்ஜிஆரிடம் இருந்து தேர்தல் அணுகுமுறையை எடுத்துக் கொண்டோம். அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அண்ணா, எம்ஜிஆரை நாங்கள் சொந்தம் கொண்டாடக் கூடாது என யாரும் சொல்ல முடியாது. எதிரிகள் யார் என சொல்லிவிட்டு களத்திற்கு வந்துள்ளதால் அவர்களை மட்டும் தான் எதிர்ப்போம். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தீய சக்தி திமுகவிற்கும், தூயசக்தி தவெகவிற்கும்தான் போட்டியே. வள்ளுவர் கோட்டத்திற்கு காட்டுற அக்கறையை மக்கள் வாழ்வாதாரத்திலும் கொஞ்சம் காட்டலாமே? அரசாங்கம் நடத்துறாங்களா இல்ல கண்காட்சி நடத்துறாங்களா. சலுகைகளுக்கு எதிரானவன் நான் இல்லை; மக்களுக்கான சலுகைகளை இலவசம் என்று சொல்லி அசிங்கப்படுத்துபவன் இல்லை” என்பது உட்பட பல்வேறு கருத்துக்களை விஜய் பேசினார். தவெக தலைவர் விஜயின் முழு பேச்சை காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்…















































