எந்த தவறும் செய்யாமல் கனவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் என்னை டார்கெட் செய்வது ஏன் என நடிகை கயாடு லோஹர் கேள்வி எழுப்பியிருக்கிறார். 
பிஸி நடிகை
‘முகில் பேட்டை’ என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காயடு லோஹர். அதனைதொடர்ந்து மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழில் ‘டிராகன்‘ திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு அதர்வா முரளியுடன் ‘இதயம் முரளி’, ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ‘இம்மார்ட்டல்’ மற்றும் சிம்புவின் 49வது படத்தில் நடித்து வருகிறார். மேலும், மலையாளம் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.
வேதனை
இந்நிலையில், தன்னைப்பற்றிய தவறான செய்திகள் பரவி வருவதாக நடிகை கயாடு லோஹர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர பேசியதாவது; “சோஷியல் மீடியாக்களில் என்னைப் பற்றி பரவும் அவதூறு கருத்துகள் மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு கண்ணியமான பின்னணியில் இருந்து வருபவள் நான், பின்னால் பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை என்றாலும், ஆழ் மனதில் அது உறுத்திக்கொண்டே இருக்கும்; எந்த தவறும் செய்யாமல் கனவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள்?” என்று கூறியுள்ளார்.















































