மலையாள சினிமாவுக்கு தான் தேவையில்லை என்று நடிகை ஹனி ரோஸ் பேசியுள்ள சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திறமையான நடிகை

2005ம் ஆண்டு வெளியான 14 வயதில் பாய் பிரண்ட் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஹனி ரோஸ். அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தார். மலையாளம் மட்டுமின்றி தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரம்

நடிகை ஹனி ரோஸ் தற்போது ‘ரேச்சல்’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஆனந்தினி பாலா இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில், ராதிகா ராதாகிருஷ்ணன், பாபுராஜ், ரோஷன் பஷீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டிசம்பர் 6ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் ‘ரேச்சல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

தேவையில்லை

இதில் நடிகை ஹனி ரோஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர். விழாவில் ஹனி ரோஸ் பேசுகையில்; “மலையாள சினிமாவுக்கு நான் தேவையா என்று நீங்கள் என்னிடம் கேட்டால், பதில் இல்லை என்பதுதான்” என்றார். நடிகை ஹனி ரோஸுக்கு சினிமாவில் பெரியளவில் அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும், அவரின் கவர்ச்சியால் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here