துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘காந்தா’ திரைப்படம் 3 நாட்களில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

வாழ்க்கை வரலாறு படம்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று, வசூலை அள்ளியது. தற்போது துல்கர் சல்மான் ‘காந்தா’ என்ற படத்தில் நடித்துள்ளார். எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ நடித்துள்ளார்.
பெரும் வரவேற்பு
வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘காந்தா’ திரைப்படம், கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. ‘காந்தா’ திரைப்படம் கடந்த 3 நாட்களில் ரூ.24.50 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.















































