தனது அம்மாவின் ஆசையை 10 வருடத்திற்கு பிறகு நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.
கொண்டாடப்படும் ஹீரோயின்
மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமான மாளவிகா மோகனன், ‘பேட்ட’ திரைப்படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். அதைதொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். ‘மாஸ்டர்’ படத்தில் நடித்ததால் விஜய் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஹீரோயினாகவும் மாறினார். இதையடுத்து மாளவிகா மோகனன் நடித்த ‘தங்கலான்’ ‘திரைப்படம் அவருக்கு விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றுக்கொடுத்தது. மலையாளத்தில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தாலும், ஏனோ தமிழில் வெற்றிப்படத்தை கொடுக்க திணறி வருகிறார்.

பிஸி
தற்போது அவரது கைவசம் தெலுங்கில் பிரபாஸ்க்கு ஜோடியாக நடித்து வரும் ‘ராஜா சாப்’ திரைப்படம் உள்ளது. மற்ற சில திரைப்படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தென்னிந்திய திரையுலகை தாண்டி, சில பாலிவுட் படங்களில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். 
நிறைவேறிய கனவு
மாளவிகா மோகனன் பாரிஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில், தன்னுடைய தாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அம்மாவின் 10 வருட மனக்குமுறலை ஒருவழியாக தீர்த்துவிட்டதாகவும், அவரின் ஆசையையும் நிறைவேறி விட்டதாகவும் கூறியுள்ளார். அதாவது பத்து வருடத்திற்கு முன்பு, ஒருமுறை மாளவிகா மோகனன் தன்னுடைய அம்மாவுடன் பாரிஸுக்கு சென்ற சமயத்தில் மழை கொட்டி தீர்த்தத்தால், அவர்கள் ஹோட்டலில் அறையை விட்டு எங்குமே செல்லமுடியாமல் போனதாம். எனவே தற்போது 10 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அம்மாவுடன் பாரிஸுக்கு சென்றுள்ள மாளவிகா மோகனன், அம்மாவை அவருக்கு பிடித்த பல இடங்களுக்கு அழைத்து சென்று அவரின் ஆசையை நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளார். மேலும் பட பிடிப்புகள் இல்லாமல் ஓய்வில் இருக்கும் போதெல்லாம் பெற்றோருடன் இதுபோல் பயணம் மேற்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.















































