நானும் ரஜினியும் இணைந்து படம் பண்ணுவோம் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்தார்.

அன்ன கொடி

துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்; “தமிழ்நாட்டை போல் தெலுங்கானாவிலும் கல்வி திட்டங்கள் கொண்டு வரப்படும் என ரேவந்த் ரெட்டி கூறி இருப்பது பாராட்டுக்குரியது. தமிழ்நாடு நீண்ட காலமாக செய்து வருகிறது. அன்ன கொடி எப்போதோ பறந்தது. மறுபடியும் பறக்கவிட்டது எனக்கு பெருமை. அதை மற்றவர்களும் பின்பற்றுவது தமிழ்நாட்டுக்கு பெருமை” என்றார்.

நிச்சயம் நடக்கும்

நடிகர் ரஜினியுடன் இணைந்து படம் நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “ரஜினியும், நானும் மீண்டும் இணைந்து படம் பண்ணுவோம். ரஜினியும் நானும் கண்டிப்பாக இணைந்து நடிப்போம். ஏற்கனவே இருவரும் சேர்ந்து நடித்திருந்தாலும், மீண்டும் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன்” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here