தனது குடிருப்பில் வசித்து வரும் உதவி இயக்குனர் ஒருவர் வாடகை பணம் தராமல் ஆபாசமாக பேசி மிரட்டுவதாக பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. சரண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வாடகை பிரச்சனை

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி. சரண். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான குடியிருப்பை உதவி இயக்குநர் திருஞானம் என்பவருக்கு சரண் வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால் அந்த உதவி இயக்குநர் 20 மாதங்களுக்கும் மேலான வாடகை பணத்தை தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

மிரட்டுவதாக புகார்

இதுபற்றி கேட்ட எஸ்.பி.பி. சரணை அவர் மிரட்டியதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ள எஸ்.பி.பி. சரண், ஆபாசமாக பேசி மிரட்டிய உதவி இயக்குனர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். பாடகர் எஸ்.பி. சரண் உதவி இயக்குநர் மீது போலீசில் புகார் அளித்திருக்கும் சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here