அனுஷ்கா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காட்டி’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
திறமையான நடிகை
2006 ஆம் ஆண்டு ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தெலுங்கு படங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த அனுஷ்கா, தமிழில் வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நடிகை அனுஷ்கா ஷெட்டி “பாகுபலி” படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார். இவர் நடித்த தேவசேனா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகை அனுஷ்கா, அனைத்து மொழியிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. கடைசியாக அவர் நடித்த “மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளாக எந்தப் படமும் ரிலீஸாகவில்லை.
வசூல்?
சில வருட இடைவெளிக்கு பிறகு நடிகை அனுஷ்கா நடிப்பில் ‘காட்டி’ திரைப்படம் உருவானது. அவர் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த ‘காட்டி’ என்ற திரைப்படம் நேற்று பலகட்ட தாமதங்களுக்குப் பிறகு ரிலீஸானது. ஆக்ஷன் திரில்லர் கதையில் வெளியாகி இருக்கும் இந்த படத்தில் விக்ரம் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ‘காட்டி’ திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாளில் சுமார் ரூ.2 கோடி வசூலித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அனுஷ்காவுக்கு ஒரு கம்பேக் படமாக ‘காட்டி’ அமைந்துள்ளது.