ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்க மறுத்துவிட்டதாக நடிகை சுவாசிகா சொன்ன தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிகப்பெரிய பட்ஜெட்
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ராம் சரண். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான இவர், தற்போது புஜ்ஜி பாபு இயக்கத்தில் உருவாகி வரும் பெத்தி படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
நோ சொல்லிட்டேன்
கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன லப்பர் பந்து திரைப்படத்தில், நடிகை சுவாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சுவாசிகா அந்த பேட்டியில் பேசியதாவது: “அம்மாவாக நடிக்க எனக்கு தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தன. அதில் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்க கேட்டதுதான். பெத்தி என்கிற படத்திற்காகத்தான் கேட்டார்கள். ஆனால், நான் நோ சொல்லிவிட்டேன். எனக்கு 33 வயதுதான். இப்போது நான் ராம் சரண் அம்மாவாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த நேரம் வரும்போது நான் நடிக்கிறேன்’’ என கூறியுள்ளார். ராம் சரணுக்கு தற்போது 40 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.