நடிகை ஹன்சிகா தனது கணவரை விவாகரத்து செய்யும் முடிவில் இருப்பதாக கூறப்படுவது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி நடிகை

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. குட்டி குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த ஹன்சிகாவிற்கு, ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. சமீபகாலமாக உடல் எடையை கணிசமாக குறைத்து மெல்லிய தோற்றத்திற்கு மாறி ரசிகர்களை அவர் அதிர்ச்சி அடையச் செய்தார். நடிகை ஹன்சிகா சோஹைல் கதுரியா என்ற தொழிலதிபரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் மிகவும் கோலாகலமாக நடந்தது.

விவாகரத்து?

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகை ஹன்சிகா, மும்பையில் உள்ள தனது தாய் வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனையே இதற்கு காரணம் எனவும், விரைவில் விவாகரத்து முடிவை ஹன்சிகா நாட இருப்பதாகவும் பேசப்பட்டது. ஆனால் இதனை சோஹைல் கட்டாரியா மறுத்த நிலையிலும், ஹன்சிகா மவுனம் காத்து வந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இதனிடையே தனது சமூக வலைதள பக்கங்களில் உள்ள கணவர் சோஹைல் கட்டாரியாவின் புகைப்படங்களை நடிகை ஹன்சிகா அதிரடியாக நீக்கி இருக்கிறார். இதனால் ஹன்சிகா கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துவிட்டதாகவே பேச்சு அடிபடுகிறது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here