இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார்.
திருமணம்
உலகின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்த சாய்னா நேவாலுக்கும் இந்திய முன்னாள் பேட்மிண்டன் வீரர் பருபுல்லி காஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதற்கு முன்பு அவர்கள் 14 ஆண்டுகள் காதலித்து வந்தனர். இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்த நிலையில், தனது 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.
வெவ்வேறு திசை
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்; “வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நிறைய யோசித்த பிறகு, பருபள்ளி கஷ்யப்பும் நானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்களுக்கும் ஒருவருக்கொருவருக்கும் அமைதி, வளர்ச்சி மற்றும் நல்வாழ்வைத் தேர்வு செய்கிறோம். அந்த நினைவுகளுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், மேலும் எதிர்காலத்திற்கு வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். சாய்னாவின் இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.