பிரபல இயக்குநர் வி. சேகர் Little Talks Youtube சேனலுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் சினிமாவில் தான் சந்தித்த பல விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய வி.சேகர்; “என்னோட சமகாலத்துல வந்த பாண்டியராஜ், பார்த்திபன் எல்லாம் கார் வாங்கிட்டாங்க. நான் சினிமாவை விட்டு சைக்கிள்ல போயி மறுபடியும் மாநகராட்சி வேலையில சேர்ந்துட்டேன். கஷ்டப்பட்டு கிடைச்ச சினிமாவை புரட்சி பேசி விட்டுட்டு வந்துடீங்களேனு வீட்ல கவலைப்பட்டாங்க. அப்போ நான் எடுத்த படம் தான் “நான் பிடிச்ச மாப்பிள்ளை”. அந்த படம் 100 நாள் ஓடி ஒரே நைட்ல வீடு, கார் எல்லாமே வாங்குனேன்” என்றார்.