டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற ‘நரிவேட்டை’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவேற்பு
இயக்குநர் அனுராஜ் மனோஹர் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘நரிவேட்டை’. இப்படத்தில் பிரியம்வதா, சுராஜ், ஆர்யா சலீம், அப்புன்னி சசி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய்யின் இசையில் உருவான இப்படத்தில் தமிழ் இயக்குநரும், நடிகருமான சேரன் மலையாள திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். கடந்த மே 23 ஆம் தேதி வெளியான ‘நரிவேட்டை’ திரைப்படம் ரசிகர்காளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அசத்தல் நடிப்பு
கோபம் கலந்த வாலிபர், பொறுப்பான காவலர் என 2 விதமான நடிப்பில் அசத்தியுள்ளார் நடிகர் டொவினோ தாமஸ். போலீஸ் அதிகாரியாக சேரனும் மிரட்டியிருக்கிறார். இதனிடையே ‘நரிவேட்டை’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் சோனி லைவ் OTT தளத்தில் ஜீலை 11 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.