‘டிராகன்’ படத்தின் 100வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதீப் ரங்கநாதன், “அஸ்வத் ‘ஓ மை கடவுளே’ படம் இயக்கி கொண்டிருக்கும் சமயத்தில் என்னை அப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க கூப்பிட்டார். ஆனால் நான், நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அவரிடம் கூறிவிட்டேன்” என்றார். பிரதீப் ரங்கநாதனின் முழு பேச்சை கேட்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்…