விஜய் சேதுபதி நடிப்பில் ஆறுமுக குமார் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ஏஸ்’. இப்படத்தில் ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, யோகி பாபு, பப்லு பிருத்வீராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று (மே 23.,) திரையரங்குகளில் வெளியானது. சென்னையில் உள்ள திரையரங்கில் ஒன்றில் நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் இன்று திடீர் விசிட் அடித்தனர். அப்போது விஜய் சேதுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில்; “படம் வெளியாகியிருப்பது நிறைய பேருக்கு தெரியவில்லை. அது எங்களுடைய தவறுதான். சில நெருக்கடியால் திடீர்னு படத்தை வெளியிட வேண்டும் என்ற அவசியம் வந்துவிட்டது” என்று கூறினார்.















































