சத்தமே இல்லாமல் உதவி செய்பவர் நடிகர் அஜித் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார்.
விருது
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட இருப்பதாக மத்திய அரசால் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து நேற்று டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் பத்மபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. அதில் நடிகர் அஜித்திற்கும் பத்மபூஷன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. திரைபிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாராட்டு
இதனைத்தொடர்ந்து குடியரசு தலைவர் அஜித்தை புகழ்ந்து ஒரு பதிவு போட்டுள்ளார். திரைத்துறையில் அஜித்தின் சாதனைகளை பற்றியும், அவரின் திறன் பற்றியும் பாராட்டியுள்ள குடியரசு தலைவர், சத்தமே இல்லாமல் அஜித் பல உதவிகளை செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.















































