தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வந்த நடிகை பூஜா ஹெக்டே முதன்முறையாக கன்னட சினிமாவில் அறிமுகமாகிறார்.
தொடர் தோல்வி
தமிழில் “முகமூடி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, அதன்பின் பட வாய்ப்புகள் எதுவும் அமையாததால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு சில வெற்றி படங்களை கொடுத்திருந்த நடிகை பூஜாவுக்கு, கடந்த 2020 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த “அல வைகுந்தபுரமுலு” திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவின.
என்டரி
தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே கன்னட சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். அனுப் பண்டாரி இயக்கத்தில் கிச்சா சுதீப் கதாநாயகனாக ‘பில்லா ரங்கா பாட்ஷா’ என்ற தலைப்பில் ஒரு படத்தை அறிவித்து நடித்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய படமாக இப்படம் உருவாக இருக்கிறது. இதில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.