தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் தனது ஐடி விங் நிர்வாகிகளை Virtual warriors என அழைத்து வைப் கொடுத்துள்ளார்.
முக்கிய கூட்டம்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியினருக்கான தேர்தல் பயிற்சி கூட்டம் சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்றது. தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அக்கட்சியின் தொழில்நுட்ப பிரிவினர், சமூக ஊடக வலைதள பிரிவினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விஜய் கொடுத்த வைப்
இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் காணொளி மூலம் நிர்வாகிகளிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இனி நீங்கள் ரசிகர்கள் மட்டுமல்ல.. விரிச்சுவல் வாரியர்ஸ்.. அப்படிதான் உங்களை அழைக்க தோன்றுகிறது. இந்தியாவிலேயே பெரிய சோசியல் மீடியா படை தமிழக வெற்றிக் கழகம் கட்சியினுடையதுதான். இதை நாம் சொல்வதைவிட மற்றவர்கள் அதை தெரிந்து கொள்ள வேண்டும். கட்சி நிர்வாகிகள் கண்ணியமாக செயல்பட வேண்டும். கூடிய விரைவில் நாம் எல்லோரும் சந்திப்போம், உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்”. இவ்வாறு விஜய் தனது உரையில் பேசினார்.