இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சச்சின்’. காதல், நகைச்சுவை என அனைவராலும் ரசிக்கப்பட்ட ‘சச்சின்’ திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வசூலை பெற்றது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இத்திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் கடந்தாண்டு ரீரிலீஸாகி நல்ல வசூலை பெற்ற நிலையில், ‘சச்சின்’ திரைப்படமும் நல்ல வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.