ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த Lamborghini காரை நடிகை ஜான்வி கபூருக்கு அவரது தோழியும், தொழிலதிபருமான அனன்யா பிர்லா பரிசாக கொடுத்து அசத்தியிருக்கிறார்.
நட்சத்திர வாரிசு
1980களில் கொடி கட்டி பறந்த மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவரது தந்தை போனி கபூர் தயாரிப்பாளர் என்பதால் அவருக்கு நட்சத்திர வாரிசு அந்தஸ்தும் அதிகமாவே உள்ளது. ஹிந்தியில் 2018 ஆம் ஆண்டு வெளியான தடாக் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஜான்வி கபூர், தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதுடன் சிறந்த அறிமுக கதாநாயகிக்கான விருதையும் பெற்றுள்ளார். தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.
விலைமதிப்பான பரிசு
திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி ஜான்வி கபூர் பேஷன் ஷோவில் கலந்துகொள்வது, போட்டோ ஷுட் நடத்துவது என ஒப்போது பிஸியாகவே உள்ளார். தற்போது நடிகை ஜான்வி கபூருக்கு ரூ.9 கோடி மதிப்புள்ள Lamborghini கார் பரிசாக கிடைத்துள்ளது. இவ்வளவு விலைமதிப்புள்ள காரை ஜான்வி கபூருக்கு பரிசாக கொடுத்தது அவரது நெருங்கிய தோழியான தொழிலதிபர் அனன்யா பிர்லா. அனன்யாவுக்கும் இதுபோல் விலைமதிப்பான பரிசு பொருட்களை ஜான்விக்கு கொடுப்பது வழக்கமானது தானாம்.