இந்திய சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸின் திருமணம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

உயர்வு

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த பிரபாஸ், பாகுபலி வெற்றிக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார். பாகுபலிக்கு பிறகு சலார், கல்கி 2898 ஏடி படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றன. தற்போது ஸ்பிரிட், கண்ணப்பா உள்ளிட்ட பல படங்களில் பிரபாஸ் நடித்து வருகிறார்.

திருமணம்?

45 வயதாகும் நடிகர் பிரபாஸிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிகை அனுஷ்காவும் பிரபாஸும் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால் அதனை இருவருமே மறுத்தனர். இந்நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த பிரபாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here