தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றதுங்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் விஜய் பேசியதாவது; “மன்னராட்சி முதலமைச்சர் அவர்களே…. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே… பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் மட்டும் போதாதே முதலமைச்சர் அவர்களே. செயலிலும் காட்ட வேண்டும் அவர்களே!… பாஜக ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லிவிட்டு நீங்கள் செய்யும் ஆட்சி என்ன?. அதற்கு கொஞ்சம் கூட குறையாத பாசிச ஆட்சித்தானே. மக்கள் விரோத ஆட்சியை, மன்னராட்சி போல செய்கிறார்கள். கேள்வி கேட்டால் கோபம் வருகிறது.. விமர்சித்தால் மட்டும் கோபப்படுகிறார் முதலமைச்சர். உங்கள் ஆட்சிக்கு பெண்கள் முடிவு கட்ட போகிறார்கள். தமிழ்நாடு பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மண். இதனை நாம் பாத்துக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து வரும் ஜி.எஸ்.டி.யை வாங்கிக்கிறீங்க, ஆனா பட்ஜெட்ல நிதியை தரமாட்றீங்க… இங்க உள்ள பிள்ளைகளுக்கு நிதி தராம மும்மொழிக் கொள்கையை திணிக்கிறீங்க. தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார்… பலருக்கு தண்ணி காட்டிய மாநிலம் தமிழ்நாடு. இதுவரைக்கும் சந்திக்காத வித்தியாசமான தேர்தலை அடுத்த வருடம் தமிழ்நாடு சந்திக்கும். தமிழகத்தில் இரண்டு முனை போட்டிதான். அது தவெக மற்றும் திமுக இடையே தான்.