இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம், ரௌடி பிக்சர்ஸ், அவ்னி சினி மேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் ‘மூக்குத்தி அம்மன்2’ திரைப்படத்திற்கான பூஜை இன்று விமர்சையாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்க வந்த நடிகை நயன்தாராவை ரசிகர்களும், செய்தியாளர்களும் சூழ்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.















































