மகாராஷ்டிரா மாநிலத்தில் சாலையில் குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் திருப்பியபோது ஏற்பட்ட விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குறுக்கே வந்த பைக்
மகாராஷ்டிரா மாநிலத்தின் லட்டூர் – நான்டெட் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் திடீரென சாலையை கடக்க முயற்சித்தார். இதை பார்த்த பேருந்து ஓட்டுநர் பைக் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை வலதுபுறமாக திருப்பினார்.
சிசிடிவி காட்சி
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் எதிர்திசையில் சென்று கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பேருந்து விபத்துகுள்ளாகும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.