திருப்பதியில் திருமணம் செய்துகொண்டு கணவர், குழந்தைகளுடன் திருமலையில் வாழ்க்கையை கழிக்க விரும்புவதாக நடிகை ஜான்வி கபூர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
நட்சத்திர வாரிசு
1980களில் கொடி கட்டி பறந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவரது தந்தை போனி கபூர் தயாரிப்பாளர் என்பதால் அவருக்கு நட்சத்திர வாரிசு அந்தஸ்தும் அதிகமாவே உள்ளது. ஹிந்தியில் 2018 ஆம் ஆண்டு வெளியான தடாக் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஜான்வி கபூர், தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதுடன் சிறந்த அறிமுக கதாநாயகிக்கான விருதையும் பெற்றுள்ளார். சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி இருந்த அவர், அடுத்து தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.
இதுதான் ஆசை
இந்நிலையில், பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜான்வி கபூர், தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அப்போது “திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருமலையில் வாழ்க்கையை கழிக்க விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.