எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிக்காதது ஏன் என அத்தொடரில் ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதா பதிலளித்துள்ளார்.
சுவாரஸ்யமான தொடர்
சன் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் எதிர்நீச்சல் தொடருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. தினம் தினம் பல திருப்பங்களும், சுவாரஸ்யமான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் தொடராக இருந்தது. இந்தத் தொடரில் நடிகை கனிகா, மறைந்த நடிகர் மாரிமுத்து, மதுமிதா, ஹரிப்ரியா, கமலேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த சீரியல் 400 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்ததுடன், டிஆர்பியிலும் முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாகம்
இந்த சீரியலில் வில்லன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து திடீரென மரணமடைந்தததால், அவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்தார். ஆனால் இவர், மாரிமுத்து இடத்தை பூர்த்தி செய்ய தவறிவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் எதிர்நீச்சல் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் காரணமாக கடந்த ஜூன் 8 ஆம் தேதியோடு எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டாலும், சில தினங்களுக்கு முன்பு அதன் 2 ஆம் பாகத்திற்கான ப்ரமோ வெளியானது. எதிர்நீச்சல் சீரியலின் 2 ஆம் பாகத்தில் கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை ஆகியோர் நடித்த நிலையில், ஜனனி கேரக்டரில் நடித்து வந்த மதுமிதாவுக்கு பதிலாக நடிகை பார்வதி ஜனனி நடித்திருந்தார்.
அப்புறம் சொல்றேன்
இதில் ஜனனி கேரக்டரில் மதுமிதா ஏன் நடிக்கவில்லை என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில், இன்ஸ்டா லைவில் வந்த மதுமிதாவிடம், ஏன் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகினீர்கள் என்று ஒரு ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்த மதுமிதா, இதுகுறித்து அடுத்த லைவ்வில் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.