பிரபல நடிகை கெளதமி Little Talks Youtube சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது; “உண்மையில் கேன்சர் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த கேன்சர் நோய் எனக்கு வந்த பொழுது, இப்படிப்பட்ட உலகில் நமக்கு இப்படிப்பட்ட நோய் வந்துவிட்டது. இனி இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு வந்தது. ஆனால், அதை எதிர்கொள்வதற்கான தைரியம் எனக்கு கிடைத்துவிட்டது. உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் இடையே ஒரு மைய ரேகை இருக்கும். அந்த ரேகையை நீங்களும் தாண்ட வேண்டாம், அவர்களையும் தாண்ட விட வேண்டாம். ஆரம்ப காலத்தில் நான் அந்த ரேகையை அதிகமாக தாண்டிவிட்டேன்.. ஆனாலும் எனக்கு அது ஒரு வாழ்க்கை பாடமாக அமைந்தது. பிந்நாளில் நான் அதை சரி செய்துகொண்டேன்” என்று கூறியுள்ளார்.