பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள ரயில் நிலையத்தில் இன்று காலை தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குண்டுவெடிப்பு

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. குண்டுவெடிப்பு நடந்த போது, பெஷாவர் செல்லும் பயணிகள் ரயில் ஒன்று நடைமேடையில் நின்றுகொண்டிருந்தது. இந்த ரயிலில் இருந்த மக்கள் குண்டுவெடிக்கும் சத்தத்தை கேட்டு அலறி அடித்து கொண்டு ஓடும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

மீட்பு பணி

விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு மற்றும் பாதுகாப்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களை மருத்துவ உதவிக்காக குவெட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிக்கெட் பூத் அருகே வெடிப்பு ஏற்பட்டபோது, ​​இரண்டு ரயில்கள் புறப்பட இருந்ததாகவும், ஏராளமான பயணிகள் நடைமேடையில் இருந்ததாகவும் ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குண்டுவெடிப்பின் தன்மை குறித்து விசாரணை மேரோக்ள்ளப்பட்டு வருவதாகவும், சேதங்கள் குறித்தும் மதிப்பிடப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here