துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’. வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் வரும் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகர் துல்கர் சல்மான் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது, பெண் ரசிகை ஒருவர் துல்கர் சல்மானை பார்த்து தேம்பி அழுதார். பின்னர் அந்த பெண் ரசிகரை துல்கர் சல்மான் மேடைக்கு அழைத்தார். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் அழுதுள்ளார். அந்த ரசிகையுடன் புகைப்படம் எடுத்து அவரது ஆசையை நிறைவேற்றினார் துல்கர் சல்மான். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.