நிஜ வாழ்க்கையில் தான் ஸ்பையால இல்லாததது தான் என் வாழ்க்கை இப்படி ஆனதற்கு காரணம் என நடிகை சமந்தா தெரிவித்திருக்கிறார்.
ஹிட் படங்கள்
தமிழில் பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. நான் ஈ படத்தின் மூலம் பல ரசிகர்களை உருவாக்கினார். தெலுங்கு மற்றும் தமிழில் அதிகம் கவனம் செலுத்தி வந்த நடிகை சமந்தா, கத்தி, தங்க மகன், தெறி, மெர்சல் என்று முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பணிபுரிய தொடங்கினார். சூர்யா, விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என்று பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ஹிட் படங்களை கொடுத்தார்.
முன்னணி நடிகை
சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் இவர் நடனமாடிய “ஓ சொல்றியா மாமா” பாடல் மூலம் சமந்தாவின் வேறு பரிமாணத்தை ரசிகர்கள் பார்த்தனர். தற்போது தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. விவாகரத்து, மையோசிட்டிஸ் என்ற அரியவகை நோய், சர்ச்சைகள் என பல இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தற்போதும் முன்னிலை நடிகையாக முன்னேறி வருகின்றார் சமந்தா.
என் தவறு தான்
இந்நிலையில், தான் உளவாளியாக நடித்திருக்கும் வெப் சீரிஸ் ஒன்றின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார் சமந்தா. அவரிடம் நிஜ வாழ்க்கையில் நீங்கள் ஸ்பையாக இருந்திருக்கிறீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு நடிகை சமந்தா கூறியிருப்பதாவது; “நிஜ வாழ்க்கையில் நான் அப்படி இருந்திருக்க வேண்டும். அதை செய்யாதது என் தவறு. ஸ்பையாக இல்லாததால் தான் என் வாழ்க்கை இப்படி ஆனது” என பதில் கூறியிருகிறார். தனது முன்னாள் கணவர் நாகசைதன்யாவை மனதில் வைத்துதான் சமந்தா இப்படி பேசியிருக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.