பெங்களூரு நகரத்தில் நேற்று ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள் தங்கள் கார்களை சாலையிலேயே விட்டுச் செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

சிக்கி தவிப்பு

தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைநகராக நிகழும் பெங்களூருவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே பெங்களூரு நகரம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக மாறி வருகிறது. ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு புதங்கிழமை இரவு ஒரு மாசமான நாளாக மாறிவிட்டது.

வேதனை

பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. மடிவாலா மேம்பாலம் பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கடப்பதற்கு இரண்டரை மணி நேரம் வரை ஆனதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அதிலும் பொறுமை இழந்த சிலர் தங்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here