விஜய் டிவி சீரியல் நடிகை மான்சி ஜோஷிக்கு அண்மையில் பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
ரசிகர் கூட்டம்
கன்னட டிவி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை மான்சி ஜோஷி. இவர் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அன்புடன் குஷி’ தொடரில் கதாநாயகியாக நடித்தார். இதையடுத்து, சன் டிவியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் மனைவி’ தொடரிலும் மான்சி ஜோஷி நடித்தார். தற்போது மலையாள தொடரான ‘சந்திரகாந்தம்’ என்கிற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. விஜய் டிவி மற்றும் சன் டிவி என இரண்டு முன்னணி தமிழ் சேனல்களின் தொடர்களிலும் நடித்து பிரபலமான நடிகை மான்சி ஜோஷிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
வாழ்த்து
இந்த நிலையில், தனக்கும் ராகவா என்பவருக்கும் தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை மான்ஷி ஜோஷி. பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இவருடைய திருமண நிச்சயதார்த்தத்தில், பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்தி உள்ளனர். சமூக வலைதளங்களில் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.















































