ஃபகத் பாசல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பொகெயின்வில்லா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனித்துவமான நடிப்பு

பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், மலையாள சினிமா மட்டுமன்றி தென்னிந்திய திரையுலகிலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், வேட்டையன் மற்றும் தெலுங்கில் புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து தனது தனித்துவமான நடிப்பினால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இணையத்தில் வைரல்

இதைத்தொடர்ந்து மலையாளத்தில் ‘பொகெயின்வில்லா’ என்ற திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார். அமல் நீரட் இயக்கியுள்ள இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுடன், குஞ்சாக்கோ போபன், வீணா நந்தகுமார், ஜோதிர்மயி, ஸ்ரீண்டா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகி இருக்கும் ‘பொகெயின்வில்லா’ திரைப்படம் வரும் அக்., 17ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லரின் காட்சிகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here