வீட்டில் பணியாற்றிய ஊழியரை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரபல நடிகை

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘தி கோட்’ படத்திலும் பார்வதி நாயர் நடித்திருந்தார்.

மாறி மாறி புகார்

இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தனது வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், ஐபோன், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனதாகவும், அதில் வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டு சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், தன்னை அடைத்து வைத்து தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது சுபாஷ் சந்திரபோஸ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு

இந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படாததால், அவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சுபாஷ் சந்திரபோஸ் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கடந்த மாதம் 29 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், பார்வதி நாயர் உள்பட 7 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here