மத்தியப் பிரதேசத்தின் தொழில்துறை வளர்ச்சியை வலிமைப்படுத்தும் வகையில் மாணவர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க வேண்டும் என அம்மாநில அமைச்சர் சதன்யா காஸ்யப் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொழில்துறை மாநாடு

விஐடி போபால் பல்கலைக்கழகத்தில் தொழில்துறை இணைப்பு மாநாடு நடைபெற்றது. இண்டஸ்ட்ரி கனக்ட் கான்க்லேவ் என்ற தலைப்பில் நான்கு நாட்கள் நடந்த இந்த மாநாட்டில், மத்தியப் பிரதேச மாநில குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அமைச்சர் திரு. சதன்யா காஸ்யப் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் “பாரதப்
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் சீரிய தலைமையிலான ஆட்சியில், நாடெங்கிலும் ஸ்டார்ட் அப் என்னும் தொடக்க நிலை நிறுவனங்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்முயற்சிகளைப் பாராட்டினார். ஸ்டார்ட் அப்களில் முன்னிலை வகிக்கும் மாநிலமாக மத்தியப் பிரதேசம் பரிணமிக்கும் நாள் விரைவில் தோன்றும் என்று கூறினார். மேலும், விஐடி
போபால் பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்துள்ளதற்காக, விஐடி போபால் மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு நன்றி கூற வேண்டும் என்றார்.

பாராட்டு

தொடர்ந்து அமைச்சர் பேசுகையில்; மாணவமணிகள், மத்தியப் பிரதேசத்தின் ஊரகப் பகுதிகளிலிருந்து புத்தாக்க
உத்திகளைப் பெற்றிட வேண்டும். அவர்கள் மத்தியப் பிரதேசத்தின் தொழில்துறை வளர்ச்சியை வலிமைப்படுத்தும் வகையில் தங்களுடைய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க வேண்டும். மத்தியப் பிரதேசத்தின் கல்வி மேம்பாட்டுக்காக விஐடி போபால் பல்கலைக்கழகம் அளப்பரிய பங்களிப்பை தருகிறது. அதற்கு தனது பாராட்டுக்கள்” என்றார்.

ஒப்பந்தங்கள் கையெழுத்து

மாநாட்டின் முதல் நாள் நிகழ்வின் போது ட்ரஸ்ட்டி திருமதி. ரமணி பாலசுந்தரம் அவர்களின் முன்னிலையில் நிகழ்வின் சிறப்பு பிரதிநிதிகளான C – DAC , Chirayu University மற்றும் ICARSA உடன் ஒப்பந்தங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மேலும் ட்ரஸ்ட்டி திருமதி. ரமணி பாலசுந்தரம் அவர்களால் இன்டஸ்ட்ரி இன்ஸ்ட்டியூஷனுக்கான வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டு
தொடங்கி வைக்கப்பட்டது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், C- DAC, Cirayu University, ICARDA, MANIT, MPCST, NETLINK, CoreCard India Pvt Ltd, Prepord Corp, We360, NKM Strips & Cables, Volvo Eicher Kirloskar Brothers, Impetus Technologies, Jet Aerospace & TCS உள்ளிட்ட நிறுவனங்களின் சிறப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here