இலங்கை வானொலியின் தொகுப்பாளர் அப்துல் ஹமீது திடீரென இறந்துவிட்டதாக காட்டுத்தீ போல் தகவல் பரவியது. இந்த நிலையில், தான் நலமுடன் இருப்பதாக கூறி அப்துல் ஹமீது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது; “மூன்று முறை இதேபோன்ற வதந்தி ஏற்பட்டு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு வதந்தி கிளம்பி உள்ளது. நான் நலமுடன் இருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here