தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, அகரம் அறக்கட்டளை மூலம் பல்வேறு ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக்காக உதவி வருகிறார். இந்த நிலையில், அகரம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான சர்வதேச மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகர் சூர்யா பேசியதாவது: “ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு 30 சதவீதத்திற்கும் குறைவாக தான் உள்ளது. விண்வெளி, டிஜிட்டல் என அனைத்து துறையிலும் பெண்கள் வளர்ந்து வருகின்றனர். என்னை சுற்றி உள்ள பெண்களை ரொம்ப சக்தி வாய்ந்த பெண்களாக தான் பார்த்து உள்ளேன். பெண்களால் முடியாதது ஒன்றும் இல்லை என்று தான் இன்றும் நம்புகிறேன். உடல் வலிமையை நம்பி வெற்றி பெரும் கிரிக்கெட்டில் பெண்கள் சாதித்து கொண்டு இருக்கிறார்கள். உள் மனதில் நீங்கள் என்ன ஆகவேண்டும் என நினைக்கிறீர்களோ அதுவாக மாற முடியும். ஆண்கள் உழைப்பதை விட பெண்கள் உழைப்பது மிக முக்கியம்.