மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதனைதொடர்ந்து தாண்டவம், தெறி, 2.0, ஐ, கெத்து ஆகிய படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினார். கடந்த 2015ம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்த நடிகை எமி ஜாக்சனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் காதலர் ஜார்ஜ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்த எமி ஜாக்சனுக்கு மீண்டும் காதல் மலர ஆரம்பித்தது. கடந்த 2022ம் ஆண்டு எட் வெஸ்ட்விக் என்ற இங்கிலாந்து நடிகர் மீது காதல் ஏற்பட இருவரும் எங்கும் சென்றாலும் ஜோடியாகவே ஊர் சுற்றி வந்தனர். இந்த நிலையில் பனிமூடிய மலைகளுக்கு நடுவே மிக நீண்ட தொங்கும் பலத்திற்கு நடுவில் நடிகர் எட் வெஸ்ட்விக், எமி ஜாக்சனுக்கு திருமண ப்ரோபோசல் செய்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத எமி ஜாக்சன் சந்தோஷத்தில் வாயடைத்து போனார்.