பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மீது அவரது உதவியாளர் பாலியல் புகார் கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஹிட்

லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் உருவான ‘தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ (The Fast and Furious) திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதனைதொடர்ந்து அப்படத்தின் பத்து பாகங்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பைக், கார் ஸ்டண்ட்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ திரைப்படத்தில் வின் டீசல், ஜேசன் மோமோவா, மைக்கேல் ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பாலியல் புகார்

இந்நிலையில், ‘தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தில் நடித்திருந்த வின் டீசல் மீது அவரது உதவியாளர் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். 2010 ஆம் ஆண்டு வின் டீசலிடம் பணிபுரிந்த அஸ்ட்ரோ ஜோனாசன் என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸில் வழக்கு தொடர்ந்துள்ளார். “படப்பிடிப்பின் போது அட்லாண்டாவில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் பல பெண்களுடன் அறை எடுத்து வின் டீசல் உல்லாசமாக இருந்தார். அதிகாலை நேரத்தில் சினிமா புகைப்படக் கலைஞர்கள் வருவதை அறிந்து அனைவரையும் க்ளியர் செய்துக் கொண்டிருந்தோம்.

பரபரப்பு

அவரை ஷூட்டிங்கிற்கு அழைத்துச் செல்லும் பணி எனக்கு வழங்கப்பட்டது. அந்த பெண்கள் எல்லாம் சென்றுவிட்ட நிலையில், வின் டீசல் என்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். நான் அவருக்கு ஒத்துழைக்க மறுத்த நிலையில், அவரது சகோதரி என்னை அடுத்த நொடியே வேலையில் இருந்து நீக்கிவிட்டார்”. இவ்வாறு அஸ்ட்ரோ ஜோனாசன் கூறியுள்ளார். 13 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மீது அவரது உதவியாளர் பாலியல் புகார் கூறியுள்ள சம்பவம் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here