தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா தற்போது கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இவர் ஏற்கனவே நானும் ரவுடிதான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் படத்திற்கு ‘பீனிக்ஸ் வீழான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.