நடிகை அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைராலனதை அடுத்து அவர் நடிப்புக்கு முழுக்கு போடப்போகிறாரா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

துறுதுறு நடிப்பு

தமிழ் சினிமாவில் ‘விருமன்’ படம் மூலமாக நாயகியாக அறிமுகம் ஆனவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். அவரின் எதார்த்தமான நடிப்பும், துறுதுறு குணமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துவிட்டது. இதனையடுத்து ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். டாக்டருக்கு படித்துள்ள நடிகை அதிதி ஷங்கர், சினிமாவில் இருந்த ஆசையால் நடிக்க வந்தார்.

குழப்பம்

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிதி ஷங்கர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அதில், டாக்டர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து டாக்டர் அதிதி என்பதை குறிப்பிடும் விதமாக Dr.A என பதிவிட்டுள்ளார். டாக்டர் கெட்டப்பில் அதிதி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், நடிப்புக்கு முழுக்கு போட்டு அதிதி ஷங்கர் டாக்டர் பணிக்கு சென்று விட்டாரா? அல்லது புதிய படம் எதிலும் டாக்டர் கேரக்டரில் நடிக்கிறாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here