‘அபியும் நானும்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். பின்னர் தீயா வேலை செய்யனும் குமாரு, உன்னைப்போல் ஒருவன் போன்ற ஒருசில படங்களில் நடித்தார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக களமிறங்கினார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான நிஷாவை கடந்த 2015 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அழகான பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தான் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார் நிஷா. இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் தனது மனைவிக்கு வீட்டிலேயே சிம்பிளாக வளைகாப்பு நடத்தி இருக்கிறார் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். அதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதையடுத்து, பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.