நடிகை சமந்தா விஜய் தேவரகொண்டா இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில், இப்படம் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இசை நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், படத்தின் பாடல்களுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் மேடையில் ஜோடியாக நடனம் ஆடி, பின்னர் ரசிகர்களுடன் உரையாடினர்.















































