நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெஞ்சுவலி
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் காரிமங்கலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். தற்போது மேற்சிகிச்சைகாக அவர் பெங்களூரில் உள்ள நாராயாணா இன்ஸ்டிடியூட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.















































