நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான சாகுந்தலம் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட் பெறவில்லை. தற்போது விஜய்தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார் சமந்தா. இந்த படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா, அதற்காக சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை. எனவே சினிமாவை விட்டு விலகி, அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காகவே புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை. இந்த நிலையில் சமந்தா தற்போது கோவில் கோவிலாக ஆன்மிக பயணம் தொடங்கி இருக்கிறார். வேலூரை அடுத்து உள்ள ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகை சம்ந்தா. தொடர்ந்து பல கோவில்களுக்கு சென்று வழிபடவும் அவர் முடிவு செய்து இருக்கிறார்.