பிரபல நடிகர் ராம்சரண் – உபாசனா தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர்களது குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன உபாசனா, கணவர் ராம்சரண் மற்றும் குழந்தையுடன் வெளியே வருவதை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ராம்சரண் கூறுகையில்; “தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. மகள் பிறந்த தேதியிலிருந்து 21ம் நாளில் அவருக்கு பெயர் சூட்ட திட்டமிட்டுள்ளோம். எங்களின் குட்டி தேவதை வீட்டிற்கு வீட்டிற்கு வருகை தந்ததில் அனைவரும் மகிழ்ச்சி” என்றார்.
                














































