ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் நேரில் பார்வையிட உள்ளனர். 
கோர விபத்து
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில், இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 35 தமிழர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
அவசர ஆலோசணை
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி இழப்பீடும் அறிவித்துள்ளார். அதேபோல், மத்திய ரயில்வே அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் இரங்கலையும், இழப்பீடுகளையும் அறிவித்துள்ளனர். ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசணை மேற்கொண்டார். 
பார்வையிட திட்டம்
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி ரயில் விபத்து நடந்த பாலசோர் பகுதிக்கு விரைகிறார். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு, கட்டாக் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூற இருக்கிறார். அதேபோல், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் விபத்து நடந்த பகுதிக்கு சென்று பார்வையிட இருக்கிறார்.















































