காவல் அதிகாரியின் காரை சேதப்படுத்திய வழக்கில் நடிகை டிம்பிள் ஹயாதி மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
உள்நோக்கம்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் பத்திரிகையாளர்கள் காலனியில் துணை காவல் ஆணையாளர் ராகுல் ஹெக்டே என்பவர் வசித்து வருகிறார். இந்த கட்டிடத்தில் நடிகை டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது நண்பர் டேவிட் உள்ளிட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதில் ராகுலின் அரசு கார் அவரது வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் ராகுலின் காரின் மீது டிம்பிள் ஹயாதி மற்றும் நண்பர் இருவரும் தங்களது காரைக் கொண்டு மோதியுள்ளனர். இதனால் ராகுல்கார் சேதமடைந்துள்ளது.
எப்ஐஆர் பதிவு
இது குறித்து துணை காவல் ஆணையாளரின் கார் ஓட்டுநர் ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுக்கப்பட்டுள்ள புகாரில் இது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட அதிகாரிகள், காரை கொண்டு இருவரும் மோதியது தெரியவந்துள்ளது. அதன்படி டிம்பிளுக்கு எதிராக குற்ற வழக்கு பதிவாகியுள்ளது. ஆனால் போலீஸ் அதிகாரி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்று டிம்பிள் ஹயாதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டிம்பிள் ஹயாதி மீது செக்ஷன் 353, 341, 279 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது.